முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி நிலவிவருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களது நிலைமைகள் தொடர்பில் நேற்ரு பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள 8103 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு வறட்சி நிவாரணம் முதல் கட்டமாக 6824 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு இரண்டாம் கட்டமாக7296 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலை தொடருமாக இருந்தால் மேலும் குடிநீர் விநியோக செயற்றிட்டம் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 390 குடும்பங்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 3129 குடும்பங்களுக்கும்,
துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 222 குடும்பங்களுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1895 குடும்பங்களுக்கும் வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1996 குடும்பங்களுக்கும்,
மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 471 குடும்பங்களுக்குமாக மொத்தமாக 8103 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகத்தினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியிநூடாக விநியோகித்து வருகிறோம்
இருப்பினும் இதுவரை குடிநீர் வினியோகத்துக்கான நீரினை பெறுவதில் பிரச்சனைகள் இல்லாத போதும் மாந்தைகிழக்கு பிரதேசத்தில்,
பிரதேச செயலாளர் பிரதேச சபையினர் தகவல் படி குடிநீர் வினியோகத்துக்கான குடிநீரை பெற்றுக் கொள்வதில் நீர் வற்றி காணப்படுவதால் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டிய தேவை உள்ளது இதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள இதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்க்கு தெரிவித்திருக்கிறோம்
அத்தோடு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வரட்சி நிவாரணம் (உலருணவு )வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 14999 குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.
அதில் முதல் கட்டமாக 6824விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் இடம்பெற்றுள்ளது அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 7296 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் செய்துள்ளோம்
வரட்சி தொடருமாக இருந்தால் மேலும் குடிநீர் விநியோக செயற்றிட்டம் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.