கடந்த 22.08.18 அன்று காலை முல்லைத்தீவு அரச போக்குவரத்து திணைக்களத்திற்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை கால் முறிந்த நிலையிலும் மகள் காயமடைந்த நிலையிலும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்.
22 அன்று காலை முல்லைத்தீவு மாங்குளம் முதன்மை வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த முள்ளிவாய்க்காலினை சேர்ந்த 42 அகவையுடைய யோகராசா மோகனதாஸ் மற்றும அவரது மகளாக 15 அகவையுடை மோ.சிந்துஜா இருவரும் சிறிய கன்டர் வாகனம் ஒன்று வீதியில் திருப்ப முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
விபத்தில் கால் ஒன்று முறிந்த நிலையில் குடும்பஸ்தரும் காயமடைந்த நிலையில் அவரது மகளும் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு வீதிப்போக்குவரத்து பொலீசார் குறித்த கன்டர் வாகனத்தினை ஓட்டி சென்ற சாரதியினை கைதுசெய்து பதில் நீதவான் ரி.பரஞ்சோதி அவர்களின் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது சாரதியை எதிர்வரும் 04.09.18 அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லதை;தீவு மாவட்ட பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.