தொடரும் சீரற்ற காலநிலையின் மத்தியில் முல்லைத்தீவு மணற்குடியிருப்பு பகுதி மீனவர்கள் இன்று கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டபோது பெருந்தொகை மீன்கள் சிக்கியுள்ளது.
முல்லைத்தீவில் ஒருவாரத்திற்கு மேலாக தொடரும் பருவமழை இடப்பெயர்ச்சி காரணமாக கடலின் கொத்தளிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.
இதனால் மீனவர்களின் தொழில் அண்மை நாட்களில் பாதிப்படைந்திருந்ததுடன் மீனவக்குடும்ங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தனர்.
அத்துடன் உள்ளுர் மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்ய போதியளவு மீன்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்றுஅதிகாலை கடலில் இருந்து மூன்று கடல்மைல் துரம் வரை சென்ற மீனவர்கள் கரைவலை வீச்சில் சுமார் 6 மணித்தியள கடற்போராட்டத்தின் மத்தியில் ஒரே தடைவையில் 1800 கிலோ மீன்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.