முல்லைத்தீவில் , கைகள் வெட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவர் மீட்பு..

முல்லைத்தீவு – பெருங்காட்டுப்பகுதியில், மயங்கிய நிலையில் இருந்த யுவதி ஒருவர் நேற்றையதினம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த 24 வயதுடை யுவதி ஒருவரே இவ்வாறு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டுசுட்டான் வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக  பொலிஸாருக்கு தகவல் வழப்பட்டதை அடுத்து,

சம்பவ இடத்திற்கு சென்ற  பொலிஸார்  யுவதியை மீட்டு முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் குறித்த யுவதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை   பொலிஸாரால் முன்னெடுத்துள்ளதாக மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைகள்பெருங்காடுமுல்லைத்தீவுயுவதிவெட்டப்பட்டது
Comments (0)
Add Comment