முல்லைத்தீவு நகரபகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் இருந்த தண்ணீர் மோட்டர் களவு போயுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு!
முல்லைத்தீவு நகரப்பகுதியில் சுற்றுலா கடற்கரைபகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான சிறுவர் பூங்கா ஒன்று காணப்படுகின்றது.
இந்த சிறுவர் பூங்காவில் உள்ள நீர் இறைக்கும் தண்ணீர் மோட்டார் ஒன்று 23.06.18 அன்று இரவு கழவு போயுள்ளதாக அதன் பணியாளர்களால் பிரதேச சபை செயலரிடம் முறையிடப்பட்டுள்ளது இச்சம்பவத்தினை முல்லைத்தீவு பொலீஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்து சட்ட நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 25.06.18 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளாரினால் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இரவு நேரங்களில் பொலீஸார் சுற்றுக்கால் நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.