முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணி அபகரிப்பில் வனவளதிணைக்களம்…

வன­வ­ளத் திணைக்­க­ளத்­தின் காணி­ப­றிக்­கும் பட­லம் முல்­லைத்­தீ­வில் தொடர்த வண்­ணமே உள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்­லைத்­தீவு, செம்­மலை புளி­ய­மு­னைப் பகு­தி­யில் உள்ள மக்­க­ளது தோட்­டக் காணி­களே இவ்­வாறு அப­ரிக்­கப்­பட்­டுள்­ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்­போ­தும் 100 ஏக்­கர் தமி­ழர் காணி­களை வனவளதிணைகளம் அப­க­ரித்து எல்­லை­யி­டப்­பட்­டுள்­ள­தனால்,  40 குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் முடக்­கப்­பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது .

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நாயாறு கொக்­குத்­தொ­டு­வாய் முதன்மை வீதி­யின் மேற்­குப் புற­மாக உள்ள புளி­ய­மு­னைப் பகு­தி­யில் உள்ள சுமார் 720 ஏக்­கர் காணி­கள் 1972 ஆம் ஆண்­டு­க­ளில் செம்­ம­லை­யில் உள்ள 350 மக்­க­ளுக்குப் பயிர்ச் செய்­கைக்­கென அர­சாங்கத்தினால்  வழங்­கப்­பட்­டிருந்தது.

குறித்த காணி­க­ளில்  மக்கள் வயல் மற்­றும், கச்­சான், சோளம் போன்ற உப உண­வுப் பயிர்ச் செய்­கை­யி­லும் ஈடு­பட்­ட­ நிலையில்,போர் இடம்­பெற்ற காலத்­தில அங்கு பயிர் செய்ய முடி­யா­மல் அந்­தக் காணி­கள் கைவிடப்பட்டிருந்தன.

போரின் பின்­னர் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக காணி­க­ளின் ஒரு பகு­தியை துப்­பு­ரவு செய்த மக்­கள்  மீண்டும் விவசாயத்தினை மேற்கொண்டபோது கடந்த வாரம்  அங்கு  சென்ற வன­இ­லா­காத் திணைக்­க­ளத்­தி­னர் அந்­தக் காணி­கள் வன­வ­ளத்­துக்­குச் சொந்­த­மா­னவை என்று தெரி­வித்து காணி­களை அடை­யா­ள­பப்­ப­டுத்தி பெயர்ப் பலகை நட்­டுள்­ள­னர்.

காணி­க­ளுக்­குள் அத்­து­மீ­று­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் மக்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ள­னர்.

இத­னால் அந்­தக் காணி­க­ளுக்­குச் சென்று பயிர்ச் செய்­கை­யில் ஈடு­ப­ட­மு­டி­யா­துள்­ளது என்­றும் காணி­களை மீட்­டுத் தரு­மா­றும் பாதிக்­கப்­பட்ட மக்­கள் பல­ரி­ட­மும் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபகரிப்புகாணிமுல்லத்தீவுவனவளதிணைக்களம்
Comments (0)
Add Comment