முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்களிடையே பாரிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் உள்ள குருந்தூர் மலைக்கும் வவுனியா வடக்கில் வெடுக்குநாறி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஸ்ரீ லங்க பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சென்றதால், அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது
ஸ்ரீ லங்க பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான முசமில் பத்ம உதயசாந்த மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர்,முல்லைத்தீவு தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் உள்ள குருந்தூர் மலைக்கும் வவுனியா வடக்கில் வெடுக்குநாறி மலைக்கு இன்று (03) சென்றனர்.
இன்று காலை தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் உள்ள குருந்தூர் மலைக்கு சென்ற அவர்கள் அந்த இடங்களை பார்வையிட சென்று திரும்பியபோது மக்கள் சிலரும் பிரதேச சபை உறுப்பினர் த அமலன் சி லோகேஸ்வரன் ஆகிய இருவரும் வருகைதந்து அவர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் குறித்த பகுதியை பார்வையிட வந்ததாக தெரிவித்து விட்டு அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர் இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே குழப்ப நிலை ஏற்ப்பட்டுள்ளது
அதனை தொடந்து குறித்த குழுவினர் வவுனியா வடக்கில் வெடுக்குநாறி மலைக்கு குறித்த குழுவினர் செல்லும் பொது தகவலறிந்த குறித்த பகுதி மக்கள் அவர்களை பின்தொடர்ந்து குறித்த மலைப்பகுதிக்கு சென்று அவர்கள் ஏன்வந்தார்கள் என குழம்பியபோது அவர்கள் தாங்கள் குறித்த இடத்தை பார்வையிட்டு செல்ல வந்ததாக தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் வருகைதந்த தொல்பொருள் திணைகள் அதிகாரி பொய்யான தகவலினை தெரிவிப்பதாக மக்கள் அவர்களுக்கு தமது நியாயப்பாட்டை சொல்லியபோதும் அதை போருட்படுத்தாதுய் குறித்த பகுதியை பார்வையிட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்
இதனை தொடர்ந்து குறித்த பகுதி மக்கள் குறித்த கட்சி அரசியல் பிரமுகர்கள் எங்களிடையே மீண்டும் கலவரங்களை உருவாக்க முயல்வதாக குற்றம்சுமத்தியுள்ளனர்