முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்வையிட்டார்-அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ..

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மக்களை நேரில் சென்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பார்வையிட்டுள்ளார்.

அதோடு அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு அவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்

இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ,

அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பாடசாலைகளை சென்று பார்வையிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு விஸ்வமடு பாரதி வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எம் ஏ சுமந்திரன் சி சிவமோகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் போலீசார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சிமாவை சேனாதிராஜாமுல்லைத்தீவுரூபவதி கேதீஸ்வரன்
Comments (0)
Add Comment