முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன் தினம் மாங்குளத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் சென்றுள்ளார்.
17 அகவையுடைய வினாயகமூர்த்தி விதுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த இளைஞன் குருநாகல் வெள்ளவாய பகுதியில் புகையிரம் சென்றபோது தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலீசாரின் மரண விசாரணையினை அடுத்து, இளைஞனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.