முல்லைத்தீவு உள்ளூர் மீனவர்களை தாக்கிய சிங்கள மீனவர்கள்! வேடிக்கை பார்த்த ஸ்ரீ போலீஸ்

முல்லைத்தீவு களப்பு பகுதிக்குள் சட்டவிரோத தொழில் முறையில் ஈடுபட்ட தொழில் உபகரணங்களை கைப்பற்றி வருவதற்கு உதவி புரிந்த உள்ளூர் மீனவர்களை புல்மோட்டை மீனவர்கள் பொலிசார் முன்னிலையில் வாள் , கத்தி கொண்டு தாக்குதல் மேற்கொண்டு விரட்டியடுத்துள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் அன்ரனி – மரியராசா தகவல் தருகையில் ,

முல்லைத்தீவு களப்பு பகுதிக்குள் இயந்திரம் பூட்டிய படகுகள் ஓடிவதற்கும் கூட்டுவலைத் தொழில் ஈடுபடுவதற்கும் வர்த்தகமானிமூலம் தடை செய்யப்பட்ட பிரதேசம்.

இதனால் இதனையன்டிய கொக்குளாய் , கருணாட்டுக்கேணி , குடாத்துறை உள்ளூர் மீனவர்கள் குள்ளாவில் சென்று தொழில்புரிவது வழமை. இருப்பினும் முல்மோட்டை மீனவர்கள் அடாத்தாக உட்பிரவேசித்து  தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை நீண்டகாலம் புரிவதாக தொடர்ந்தும் முறையிடப்பட்டது. இதன் பிரகாரம் இன்று காலை பொலிசார் , கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் குறித்த பகுதிகளிற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட கூட்டுவலைகள் மட்டும் 107 வலைகள் பாச்சப்பட்டிருந்தது. அவற்றினை கரைசேர்க்க உள்ளூர் மீனவர்கள் உதவி புரிந்தனர். இதன்போது தடை செய்யப்பட்ட வகையில் இயந்திரப்படகு மூலம் தொழிலில் ஈடுபட்ட 3 படகுகளையும் அதில் தொழில் புரிந்த 6 புல்மோட்டை மீனவர்களையும் பொலிசார் கைது செய்தனர். இவற்றிற்கு படகுகள் மற்றும் ஓட்டி உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கியதையடுத்து பொலிசாரும் , திணைக்களத்தினரும் தமது பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதன்போது புல்மோட்டை மீனவர்கள் சுமார் 40ற்கும் மேற்பட்ட இயந்திரப்படகுகளில் விரட்டிவந்து வாள்கள் கத்திகள் கொண்டு உள்ளூர் மீனவர்களைத் தாக்கியுள்ளனர். இதனால் மூவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் இடம் பெறும்போது பொலிசார் வேடிக்கை பார்த்தனரே அன்றி மீனவர்களை காப்பாற்றவில்லை. பொலிசாருக்கும் சட்ட வரையறை இருக்கலாம் ஆனால் உயிர் ஆபத்து விளைவிக்ககூடிய ஆயுதங்கள் கொண்டு தாக்கும்போது தற்காக்கலாம்.

இவை எவையும் இடம்பெறவில்லை என்பதே மன வேதனை என்றார்.

களப்புசிங்கள மீனவர்கள்தாக்குதல்படகுகள்போலீஸ்மருத்துவமனைமுல்லைத்தீவுவேடிக்கை
Comments (0)
Add Comment