முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விகாரை அமைக்க சென்றவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை…

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் சென்ற  பிக்குமார் அடங்கிய குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

அதனை அறிந்த பிரதேச இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து பிக்குமார் குழுவை  தடுத்து நிறுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிலை வைக்க வருவதை அறிந்த பிரதேச  இளைஞர்கள் மக்கள்  தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு சென்றவேளை அதை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற நிலையில் தன்னிமுறிப்பு குளக்கட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் வழி மறித்துள்ளனர்.

தற்போது குறித்த பகுதிக்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன் ,உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குமுழமுனைதண்ணிமுறிப்புபுத்த பிக்குகள்புத்தர்சிலைமுல்லைத்தீவு
Comments (0)
Add Comment