முல்லைத்தீவு கேப்பாபுலவவில் தீவிபத்து

முல்லைத்தீவு கேப்பாபுலவு வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் 40 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து நேற்று மாலை ஏற்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த அனர்த்தம்  இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டதா? அல்லது இயற்கையாக ஏற்பட்டதா? என இதுவரை அறியப்படவில்லை.

எனினும் தீப்பரவலின் போது அபிரதேச மக்கள்  வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த  இடத்திற்கு சென்ற  முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தம்  தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவுபொலிசார்மக்கள்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment