நாளை மறுதினம் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினம். ஆனால் எமக்கு சுதந்திரமில்லை எமது சொந்தக்காணிக்குள் நாம் போறதற்குகூட அனுமதியில்லை என கேப்பாபிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
எமது நிலை இருக்கையில் இப்படி எமக்கு சுதந்திர தினமா ?. எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இலங்கையின் சுதந்திரதினம் அது எமக்கு துக்கதினம் என்றும் அதனை கறுப்பு தினமாக தமது இடத்தில் தாம் அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எமது போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உறவுகளும்வந்து கலந்து கொள்ளுமாறும் கேப்பாப்புலவு நிலமீட்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.