முல்லைத்தீவு செம்மலை கடற்பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அதோடு படகு ஒன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று 06.05.19 அன்று செம்மலை கடற்பரப்பில் படகு ஒன்றினை சோதனை செய்துள்ளார்கள்.
இதன்போது குறித்த படகில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் வலைகள் மற்றம் உபகரணங்கள் காணப்பட்டுள்ளது.
இதை அடுத்து படகில் இருந்த மீனவரையும் படகினையும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.