முல்லைத்தீவு தேவாலயங்களில் இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் மக்கள் வழிபாடு..

கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதனை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற குண்டு வெடிப்புகள் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நடமாட்டம் மிக குறைவாக காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்கள் சிலவற்றில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தில் வழமையாக வழிபாடு  நடைபெறுகின்ற அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வழிபாடுகள் இடம் பெறாது குறிப்பிட்ட சில இடங்களை மையமாக கொண்டு குறிப்பிட்ட ஒவ்வொரு ஆலயங்களில் ஆயுதம் தாங்கிய இ ராணுவ போலீஸ் பாதுகாப்போடு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன

அந்த வகையில் முல்லைத்தீவு நகரத்தில் உள்ள ஆலயம்  ஒன்றிலும்  , முள்ளியவளை நகரத்தின் பிரதான தேவாலயம் ஒன்றிலும்  ,கூழாமுறிப்பு  பகுதியில் உள்ள தேவாலயம்  உட்பட தெரிவு செய்யப்பட்ட சில தேவாலயங்களில் இ ராணுவ போலீஸ் பாதுகாப்போடு ஆலய வழிபாடுகளில் இன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

முல்லைத்தீவுவழிபாடு
Comments (0)
Add Comment