முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால் வௌிநோயாளர் பிரிவின் மருத்துவ செயற்பாடுகள் ஸ்தமிதம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும், அவசர சிகிச்சைகளும் சிறுவர்களுக்கான சிகிச்சைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு சில வைத்தியர்கள் மாத்திரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் வைத்தியர்களின் பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பணிபகிஸ்கரிப்புமுல்லைத்தீவுவைத்தியசாலைவைத்தியர்கள்
Comments (0)
Add Comment