முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலய பரிசளிப்பு விழா 14.06.2018 அன்று மாலை இடம்பெற்றது
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
பாடசாலையில் பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பல்வேறு களை நிகழ்வுகளும் இடம்பெற்றன
நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் வலயக்கல்வி பணிப்பாளர் அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோரெனபலரும் கலந்துகொண்டனர்