முல்லையில் சட்டவிரோத மீன்பிடி தொடருமானால் மீனவர்களின் ஜனநாயக வழி போரட்டங்கள் வெடிக்கும்- ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளுக்கு, தீர்வுகள் சரியானமுறையில் கிடைக்கத் தவறும்பட்சத்தில், நிச்சயமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களைப்போல, மீனவ சமூகம் தாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கான தீர்வுகிடைக்காதவிடத்து ஜனநாயக ரீதியிலான வழியில் தாங்கள் போராடுவோம் என்பதை மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள் என்ற தகவலை அறியத்தருகின்றேன். என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து பிழையான தொழில் நடவடிக்கைகளை செய்பவர்களைத் தடுத்து நிறுத்தி எங்களுடைய மாவட்ட மீனவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வண்ணம் சம்பந்தப்பட்ட திணைக்களமோ, கடற்படை அதிகாரிகளோ, அரசின் அமைசர்களோ அதனோடு சார்ந்தவர்களையோ, நான் மாவட்ட மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தனது மக்கள் தொடர்பகத்தில், 26.06.2019 இன்றைய நாள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் பேசும்போதே ரவிகரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மீன்பிடி
Comments (0)
Add Comment