முள்ளியவளை 03ஆம் வட்டாரப்பகுதியில் அதிகளவில் கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய 19.11.18 அன்று இரவு சட்டவிரோத கசிப்பு வியாபாரம் மேற்கொள்ளும் வீடு ஒன்றிற்கு சென்ற பொலீசார் அங்கு சோதனை மேற்கொண்டபோது 10 லீற்றர் கசிப்பு இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதுடன் வீட்டின் உரிமையாளர் தப்பிஒடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட இருவரையம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.