முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்களில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவருகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளையினை சேர்ந்த இளைஞர்கள் 6பேர் குளத்தில் குளிக்க சென்றுள்ளார்கள்.
இதன்போது குளத்தின் ஆழப்பகுதியில் மூழ்கிய இளைஞன் ஒருவர் மீள வெளியில் வராத நிலையில் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஏனைய நண்பர்கள் ஈடுபட்டும் காணாத நிலையில் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில் முள்ளியவளை பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
இன்னிலையில் குறித்த இளைஞனின் உடல் நேற்ரையதினம் குளத்தின் கரையில் ஒதுக்கியுள்ளது
இதில் முள்ளியவளை 01ஆம் வட்டாரம் பொன்னகரினை சேர்ந்த 21 அகவையுடைய இந்திரன் தகீசன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.டெனிஸ்குமார் உடலை பார்வையிட்டு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின்னர் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.