முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு இராணுவம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது – மகேஷ் சேனநாயக்க..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு இராணுவம் எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் , இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடாத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயமெனப் பேசப்படுகின்றது.

எனினும் உண்மையில் நினைவு தினக் கடைப்பிடிப்பும், அவசரகால சட்டமும் இரு வேறு விடயங்கள் எனவும் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார் .

அதோடு இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்குட்பட்டு நினைவுதினத்தைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை அனைவருக்குமிருக்கின்றது எனவும்
மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செண்பகம்முள்ளிவாய்க்கால்
Comments (0)
Add Comment