முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மக்களை அணி திரளுமாறு கோரிக்கை…

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவு நாளில் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் எழுச்சியாக கொண்டாடப்பட இருக்கிறது

அந்த வகையிலே  நினைவேந்தல் நிகழ்வுக்கான  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நினைவேந்தல் குழு அறிவித்திருக்கிறது.

நினைவேந்தல் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் யாழ் பல்கலைகழக மாணவர்கள் மதகுருக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதை  அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட இருக்கின்றது இந்த நிகழ்வில் பத்து முப்பது மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு 10 32 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட  இருக்கின்றது.

பொதுச்சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளைப் பறிகொடுத்தவர் ஏற்றிவைக்க இருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 10. 33 மணிக்கு ஏணைய சுடர்கள் ஏற்படுவதோடு 10.35  மணிக்கு மலர் அஞ்சலி இடம்பெற்று  அதனைத் தொடர்ந்து மே18 பிரகடனம் வாசிக்கப்பட இருக்கின்றது .

அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் மலர் அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுவதோடு நிகழ்வு நிறைவு பெற இருக்கின்றது.

நினைவு நிகழ்வு காண அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் மிகவும் அமைதியான முறையில் எழுச்சியாக இடம்பெற இருக்கின்ற இந்த நிகழ்விற்கு எந்த விதஅச்சமு ம் கொள்ளாமல் மக்கள் அனைவரையும் ஒன்று கூடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அணிதிரளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அழைப்புநிகழ்வுமுள்ளிவாய்க்கால்
Comments (0)
Add Comment