முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொதுமக்கள் தலைமையில் அனுஸ்டிபதற்கு கரைதுறைபற்று பிரதேச சபை முழு ஆதரவு …

முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொதுமக்கள் தலைமையில் அனுக்ஷ்டிப்பதற்கு கரைதுறைபற்று பிரதேச சபை முழு அதரவு வழங்கவுள்ளதாக கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் சு. தவராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில், கடந்த  2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட கொடிய தாக்குதல்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த கோரச்சம்பவங்களை நேரில் பார்த்து அனுபவித்த பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதே பொருத்தமானது.
முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொதுமக்கள் தலைமையில் நடைபெற முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களினால் ஏற்பாடுகள் நடைபெறுகின்றதை நாங்கள் அறிகின்றோம் .
 இதற்கு கரைதுறைபற்று பிரதேச சபை முழு ஆதரவு வழங்கவுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகப்பகுதி கரைதுறைபற்று பிரதேச சபைக்கு உட்பட்டது .
 முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களின் ஏற்பாட்டில் இதுவரை நடைபெற்ற 10 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல் கூட்டங்களில் முன்னாள் போராளிகள்,
புனர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்,   தமிழர்மரபுரிமைப் பேரவை, மாற்றத்துக்கான இளைஞர் அணி, யாழ்பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்கலந்து கொண்டு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் 10 ஆ;ண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பை முன்னால் போராளிகள் இளைஞர் அமைப்புக்கள் வடக்குக் கிழக்கு மாணவர் ஒன்றியங்கள் ,
அரசியல் கட்சிகள் ,பொதுமக்கள் என அனைவரும் இணைந்து ஒழுங்கமைப்பதற்கான கலந்துரையாடல்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகள்செண்பகம்நினைவுதினம்முள்ளிவாய்க்கால்
Comments (0)
Add Comment