முழு அடைப்புக்கு மீனவர்கள் ஆதரவு : காசிமேட்டில் 20 டன் மீன்கள் தேக்கம்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் காசிமேட்டில் 20 டன் மீன்கள் தேக்கமடைந்துள்ளது.

மேலும் சென்னையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி இருந்தன. இதனால் மீன் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாகாசிமேடுகாவிரிமீனவர்கள் ஆதரவுமுழு அடைப்புவிவசாய சங்கங்கள்
Comments (0)
Add Comment