முஸ்லீம் குடியேற்றங்களினால் வன்னி மக்களின் தமிழ்மண் பறிபோய்க் கொண்டிருக்கின்றது-தமிழர்கள் தமிழருக்கு வாக்களியுங்கள் -பிரபாகணேசன்!

முஸ்லீம் குடியேற்றங்களினால் வன்னி மக்களின் தமிழ்மண் பறிபோய்க் கொண்டிருக்கின்றது-தமிழர்கள் தமிழருக்கு வாக்களியுங்கள்  என பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் காங்கிரசின் மாவட்ட காரியாலயம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 23.11.18 அன்று திறந்துவைத்து உரைநிகழ்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்..

வன்னியில் முல்லைத்தீவு,வவுனியா மன்னார் மாவட்டங்களில் உள்ள மக்களின் மோசமான நிலையினை பார்க்கும் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலையினை பார்க்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்குதான் முக்கியமான உறுப்பினர்கள் அமைச்சர்கள் தேவைப்படுகின்றார்கள்

கிராமங்களில் சென்று மக்களை பார்க்கின்ற பொழுது ஒருவேளை உணவிற்கு கூட கஸ்ரப்படுகின்ற நிலை காணப்படுகின்றது கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து,சிறுநீரகபிரச்சனை,வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இந்த மக்களிடம் இருக்கின்றன.

இவை தீர்க்கப்படுமாக இருந்தால் நேர்மையான உழல் அற்ற திறமையான பாராளமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் இந்த மண்ணுக்கு தேவைப்படுகின்றார்கள்.

இந்த மண்ணில் கடந்த 15 ஆண்டு காலமாக எந்த ஒரு தமிழ் அமைச்சர்களும் இங்கு இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் நிதிகள் சரியான முறையில் உள்வாங்கப்பட்டு மக்களுக்கான தேவையினை முன்னெடுக்கவில்லை என்பதும் கவலைக்குரியவிடயமாக இருக்கின்றது.

ஏன் என்றால் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறீசேனவாகட்டும்,இன்றைய பிரதமர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தறாஜபக்சவாக இருக்கட்டும் முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகட்டும் எவருமே தமிழ்மக்களுக்கு தேவையானவற்றை அவர்களாக கொடுக்கப்போவதில்லை என்பதை நாம் உறுதி கொள்ளவேண்டும்.

அரசியல் தீர்வினையம் அவர்கள் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

சிங்களவர்களின் மொத்த வாக்குகளை அவர்கள் இழக்க தவறுவதால் தமிழ்மக்களுக்கான தேவைகளையும் அரசியல் தீர்வினையும் கொடுக்கப்போவதில்லை ஆனால் தமிழர்கள் ஜனாதிபதியாகவோ,பிரதமராகவோ வரமுடியாத நிலை இருக்கின்றது.

அந்த அடிப்படையில் இங்கு இருக்கின்ற பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு பெற்று மக்களிடம் சேர்ப்பிக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான விடயமாக நான் பாக்கின்றேன்.

சிரித்தபடி கேட்டுவாங்கக்கூடிய விடயங்களை சிரித்தபடியும்,சண்டையிட்டு கேட்டு வாங்கக்கூடிய விடையங்களை சண்டையிட்டுவாங்கியும் எமது மக்களுக்கு தேவையானவற்றை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் இதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

அந்த அடிப்படையில் இங்கு கஸ்ரப்படும் மக்களுக்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடாக முழுமையான ஒருசேவையினை நான் செய்வதற்கு கடைமைப்பட்டுள்ளேன்.

இன்று மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்ப்பதை அவர்களிடம் இருந்து கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது.

நான் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை கூறைகூற விரும்பவில்லை தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் உரிமையினை பெற்றுதருவோம் என்றுதான் மக்களிடம் வாக்குகளை வாங்கியுள்ளார்கள். அபிவிருத்தி அல்ல ஆகவே அவர்கள் உரிமையினை நூறு ஆண்டுகளுக்கு பிறகாவது தேடி கண்டுபிடித்து கொடுக்கட்டும் அதுவரை எமது மக்களின் வாழ்க்கை இல்லாமல் விடமுடியாது ஆகவே அபிவிருத்தி எமக்கு தேவையாக இருக்கின்றது.

உரிமையும் அபிவிருத்தியும் தண்டவாளத்தினை போன்று சமர்சீராக செல்லவேண்டும் அப்படி சென்றால்தான் எமது மக்களுக்கான தீர்வினைநாம் சிரியான முறையில் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் ஆகவே எமது மக்களுக்கு தேவையான வீட்டுத்திட்டத்தை முதலில் செய்துகொடுக்கவேண்டிய கடமைப்படு எங்களிடம் இருக்கின்றது

அந்த அடிப்படையில் வன்னிமாவட்ட மக்களின் எதிர்கால சுபீட்ச வாழ்க்கைக்காக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உறுதியுடன் செயற்படும்

வன்னிமாவட்டத்தில் தமிழ் அமைச்சர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் அபிவிருத்திகள் எமது தமிழ்மக்களுக்கு கிடைக்காமல் போகின்றமையினை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.

வன்னிமாவட்டத்தில் அடிமட்டத்தில் பொருளாதாரரீதியாக கஸ்ரப்படும் மக்களிடம் இருந்து முஸ்லீம் அமைச்சர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அமைச்சர்களாக பதவி ஏற்ற பின்னர் தமது சமூகத்திற்குதான் கருணைகாட்டுகின்றார்கள்.

முஸ்லீம் வீட்டுத்திட்டங்களுக்கு சென்றால் அழகான வீடுகள்,வீதிகள்,மசூதிகள் கடைத்தொகுதிகள் கட்டப்பட்டு முழுமையான கிராமமாக அந்த வீட்டுத்திட்டங்கள் காட்சியளிக்கின்றன.

எமது வீட்டுத்திட்டங்களை பார்க்கும் போது மிக மோசமான நிலையில் இருக்கின்றன. எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது சமூகத்தினையே முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனைவிடவேறு மாவட்டங்களில் இருந்து குருநாகல்,கம்பகா,புத்தளம்,மாவட்டங்களில் இருந்து முஸ்லீம்குடும்பங்களை குடியேற்றி முஸ்லீம் குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் வன்னிமக்களின் தமிழ் மண் பறிபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

முல்லைத்தீவு நகரத்தில் முஸ்லீம் குடியேற்றம் வவுனியா நகரத்தில் முஸ்லீம் குடியேற்றம் இவை இல்லாது ஒழிக்கப்படவேண்டும் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவனாக நான் செயற்படவில்லை முஸ்லீம் மக்களை தவறாக வழிநடத்தும் முஸ்லீம் அரசியல் வாதிகளை அமைச்சர்களுக்கு எதிராச செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் தமிழர்கள் தமிழர்களுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்ற சிந்தனையினை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழர்பிரபாகணேசன்மக்கள்முல்லைத்தீவுவன்னி
Comments (0)
Add Comment