குழந்தைகள் மூக்கை அடிக்கடி நோண்டுவதை பழக்கமாக வைத்திருப்பதால், அது மூக்கின் உள்ளே உள்ள திசுக்களை பாதித்து குழந்தைகளிடையே பெரும்பாலும் காணப்படுகின்றது. இதுப்போன்று மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனை பெரியவர்களில் அதிக இரத்த அழுத்தம் அல்லது ஆர்டேரியோஸ்க்லேரோசிஸ் எனப்படும் மூக்கில் ஏற்படும் ஒருவித நோய்த்தொற்று ஆகிய காரணங்களால் வரலாம்.
90 சதவிகித இரத்தம் வடிதல் பிரச்சனைகள் மூக்கில் இரு நாசித் துவாரங்களைப் பிரிக்கும் செப்டம் என்ற இடத்தில் இருந்து வரும். இவை ஆர்டீரியர் நோஸ் ப்ளீட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இதைத் தவிர மூக்கின் ஆழ்ந்த பாகங்களில் தோன்றும் இரத்தம் வடிதல் போஸ்டீரியர் நோஸ் ப்ளீட்ஸ் என அழைக்கப்படுவதுடன் இவை அசாதாரணமானவைகளாகவும், கவலை தரக்கூடிய உடல் நிலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் மூக்கில் இரத்தம் வடிய பின்வரும் காரணங்களும் உள்ளன. மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனைப் பற்றி தெரிந்து கொள்ளவும். இந்தப் பிரச்சனைத் தொடர்ந்தால் நிபுணரை அணுகி உதவி பெறவும்.
மூக்கில் இரத்தம் வடியக் காரணங்கள்
மூக்கில் இரத்தம் வடியக் காரணமானவற்றில் முக்கியமானது சைனஸ் தொற்று. இதைத்தவிர கடும் சளி, மூக்கடைப்பை சரிசெய்யும் ஸ்ப்ரே போன்ற மருந்துகளின் அளவுக்கதிகமான உபயோகம், லுகேமியா, ஈரல் நோய்கள், ஹீமோபிலியா மற்றும் மரபுவழி இரத்தக்கட்டுக் குறைபாடுகள் மற்றும் மூக்கில் ரணம் (உள்பக்கமாகச் சுரண்டி மூக்கின் உள்சுவர்களை அழித்துவிடுதல்) ஆகியவையும் இரத்தம் வடிதல் பிரச்சனைக்கான காரணங்களில் அடங்கும்.
அறிகுறிகள்
மூக்கில் இரத்தம் வடிதலின் முதல் அறிகுறி உடல் அசதி மற்றும் இதயத்தில் மென்மையான உணர்வு ஏற்படுதல். மூக்கில் இரத்தம் வடிதல் அதிகமாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும். சிறுநீர் மற்றும் கழிவு வெளியேற்றத்தில் இரத்தம் வருவது மேலும் ஒரு அறிகுறி.
சிகிச்சை
முதல் சிகிச்சை முறை முக்கின் இரு துவாரங்களையும் ஒருமுறை பிடித்து (கிள்ளினார்போல) விட்டு அவர்களை முன்பக்கம் சாய்ந்தாற் போல அமர வைத்து 5 முதல் பத்து நிமிடம் வரை அப்படியே இருக்கச் சொல்லுங்கள். தலையை பின்புறமாக சாய்க்கக்கூடாது. ஏனென்றால் இரத்தம் மூச்சுக்குழாய் வழியாக சென்று அடைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் மூச்சு அடைபட்டுப் போகலாம்.
மூக்கில் இரத்தம் வடிதலை நிறுத்த ஐஸ் கட்டிப் பைகளை மூக்கின் மேல் வைப்பது பயனளிக்காது. • இரத்தம் வடிவது குறைவாக இருந்தால் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிப்பதும் மூக்கில் இரத்தம் வடிவதை உடனடியாக நிறுத்தும்
மூக்கில் இரத்தம் வரவைக்கும் அபாயமான காரணிகள்
எபோலா வைரஸ் ஒரு கொடிய நோய் என்பதோடு இதன் ஒரு முக்கிய அறிகுறி மூக்கில் இரத்தம் வடிவதாகும். லியுகேமியா ஒரு இரத்தம் சார்ந்த குறைபாடு. இது உடம்பில் உள்ள இரத்த செல்களை பாதிக்கிறது. அதனால் மூக்கில் இரத்தம் வடிதல் ஏற்படுகிறது. ஹீமோபிலியா பி எனப்படும் கொடிய பாதிப்பினால் விவரிக்க முடியாத ரணங்களை மூக்கினுள் ஏற்படுத்தும்.
இரத்தம் வடிவதைத் தடுப்பது எப்படி?
புளிப்புச்சுவை உள்ள பழங்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் உள்ள ப்ளேவோனாய்டுகள் ரத்தக் குழாய்களை உடைப்பிலிருந்து காத்து இரத்தம் வடிதலைத் தடுக்கிறது.