மூன்றாவது முறையாக ராமேஸ்வர மீனவர்களின் காவலை நீட்டித்துள்ளது -இலங்கை

கடந்த ஜூன் 1ஆம் தேதி கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 14 இராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

ஏற்கனவே இரண்டு முறை 14 இராமேஸ்வர  மீனவர்களின் காவலை நீட்டித்து  உத்தரவிட்டிருந்த  மன்னார் நீதிமன்றம், தற்போது மூன்றாவது முறையும் அவர்களின் காவலை நீட்டித்துள்ளது.

மேலும்  இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி வரை அனுராதபுர சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுர சிறைஇராமேஸ்வரம்இலங்கை கடற்படைகச்சதீவுகாவல் நீட்டிப்புநீதிபதிமீனவர்கள்
Comments (0)
Add Comment