விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கி மேடை பாடகர் முத்து உயிரிழந்தார். புகைப்பட்டியில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதேபோல நாமக்கல் மாவட்டம் வளையபட்டி அருகே கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களி்ல் 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.