மூவர் விடுதலை வழக்கு : உச்சநீதிமன்ற விசாரணை அமர்வின் நீதிபதிகள் விவரம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமர்வு, வரும் 15ஆம் தேதி வழக்கு விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை, கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

உச்சநீதிமன்றம்கொலை வழக்குசாந்தன்தமிழக அரசுநீதிபதிகள்பேரறிவாளன்முருகன்ராஜிவ் காந்திவிடுதலை
Comments (0)
Add Comment