மூவாயிரம் கிலோ கிராம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.
இந்த திருக்கை மீனின் பெறுமதி சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இழுவை வலையில் சிக்கிய இந்த மீனை கரைசேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரமப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இராட்சத திருக்கை மீன் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் அசாதாரண காலநிலை காரணமாக மீன்கள் குறைவாக சிக்குகின்றபோதிலும் எதிர்பாராதவிதமாக இவ்வாறான இராட்சத மீன் சிக்கியுள்ளமை மீனவர்களிற்கு மகிழ்ச்சியினை அளித்துள்ளது.