மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

* சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது-.

* கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை- விதிக்கப்படுகிறது.

* மெரினா உள்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை உள்ளது.

* குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.

* மெரினாவில் சட்டவிரோதமாக கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறைசென்னைதடைபோராட்டம்மெரினா கடற்கரை
Comments (0)
Add Comment