நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புது தில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர்.
இந்நிலையில் காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது ஆய்வின் போது தெரியவந்ததை தொடர்ந்து, மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேலும் விற்பனையில் உள்ள அனைத்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.