ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 2ல் ஆடி பெருக்கு விழா, டெல்டா மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, இன்று(25-07-16) முதல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது, டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெ., உத்தரவின் பேரில் கலெக்டர் சம்பத் தண்ணீரை திறந்து வைத்தார். வரும் 28ம் தேதி வரை கூடுதல் நீர் திறக்கப்படும். குடிநீர் தேவைக்காக தற்போது மேட்டூர் அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.