மேட்டூர் நீர்மட்டம் குறைவு: மூழ்கியிருந்த நந்தி சிலை – இரட்டை கோபுரம் வெளியே தெரிகின்றது

மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்ததையடுத்து நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் இரட்டை கோபுரம் வெளியே தெரிவதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.  

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், அணையின் நீர் மட்டம் தற்போது 60 அடியாக குறைந்துள்ளதால் நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் இரட்டை கோபுரம் ஆகியவை வெளியே தெரிகின்றது.   பழங்கால நினைவு சின்னங்களான இதை அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே நந்தி சிலையையும், இரட்டை கோபுரத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இரட்டைகோபுரம்சிலைநந்திநீர்மட்டம்மூழ்கிமேட்டூர் அணை
Comments (0)
Add Comment