மேதினக் கூட்டத்தில் தொழிலாளர்கள் தமது பேதங்களை மறந்து எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 7 ஆந் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் கூட்டம் இன்று நோர்வூட்டில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், தொழிற்சங்க பலத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் தமது மேதின கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்