மேதின கூட்டத்திற்கதான் முன்னாள் போராளிகள் அழைக்கப்படுகின்றார்கள் – சுவாமிநாதன்

ஆளும் கட்சியினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து முன்னாள் போராளிகளை கலந்துரையாடல் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளமை அமைச்சர் சுவாமிநாதனின் கூற்றிலிருந்து அம்பலமாகியுள்ளது.

வடக்கில் உள்ள மாவட்டச் செயலகங்களில் உள்ள புனர்வாழ்வுக் கிளைகள் மூலம் உள்ள பதிவு விபரங்களின்படி முன்னாள் போராளிகளை கொழும்புக்கு வருமாறும் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்திக்கவுள்ளனர் எனவும் அழைக்கப்பட்டுள்ளதாக போராளிகள் பலர் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறு உங்களால் போராளிகள் அழைக்கப்படுவதையிட்டு அச்சப்படும் போராளிகளிற்கு நீங்கள் கூறும் காரணம் என்ன எனவும் அவ்வாறு எதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சுவாமிநாதனிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் அமைச்சு ரீதியாக யாரையும் நேரடியாக அழைக்கவில்லை. இருப்பினும் கொழும்பில் இடம்பெறவுள்ள மேதினத்திற்கு யாழில் இருந்து யாரும் பங்கு கொள்ள முடியும். அதற்காகவே இவர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பதிலளித்தார்.

அம்பலம்அழைப்புகூட்டம்போராளிகள்முன்னாள்மேதினம்
Comments (0)
Add Comment