தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.
தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன் மூன்று வருடங்கள்…
ஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.
“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.