முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுக்ஷ்டித்ததால் கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட இரு வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் உணர்வாளர்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் தமது உணர்வுகளை மதிக்காத வங்கியின் கணக்கினை மூடி வருகின்றனர்.
இதனால் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள மேற்படி வங்கியில் இருந்து யாழில் மட்டும் இதுவரை 812 பேர் கணக்கை மூடியுள்ளதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாவட்டத்திலும், ஏனைய சில பிரதேசங்களிலிருந்தும் வாடிக்கையாளர் வெளியேறிவருவதாக முகநூல் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.