ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் இணைக்க மீளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இரண்டு பேரும் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து வருகி;ன்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவாலாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு வழியமைத்து விடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் சில சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.