பலப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க இருவரும் சிறந்த தலைவர்கள். இருவரும் அரசியல் அறிவு நிறைந்தவர்கள். அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டை முன்னேற்றமடையச் செய்ய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தல்களின் போது நல்லாட்சியினை ஸ்தாபிப்பதற்கு மூவின மக்களும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கினர். மறுபுறம் ஊழல்மிக்க சர்வாதிகார ஆட்சியினை முன்னெடுத்த தலைவரை பதவியிலிருந்த விரட்டி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு ஊழலற்ற தூய்மையான தலைவரை பெற்றுத்தந்து நாம் கட்சிக்கு பாரிய சேவையினை செய்துள்ளோம்.
கட்சியின் பிரதிநிதிகள் கட்சியினை சக்திமிக்கதாக மாற்றியமைக்க ஊழலற்ற நியாயமான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்ல மக்கள் பிரதிநிதியாக இருந்த போதிலும் இவரும் எதிர்வரும் காலங்களில் ஊழல்மிக்க சர்வாதிகார ஆட்சியினை முன்னெடுப்
பாராயின் அவருக்கு எதிராகவும் செயற்பட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயங்கப் போவது இல்லை என பொன்சேகா தெரிவித்துள்ளார்.