மைத்திரி யாழ் பொங்கல் விழாவிற்கு வராதது ஏன்?

ஸ்ரீலங்கா ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவில்லை. எதற்காக அவர் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுவதை தவிர்த்தார் என்பது தெரியவில்லை.

இதேவேளை பொங்கல் விழாவில் ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டு தலைவர் முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா பிரதமருக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் இடம்பெற்றதுடன் தேர்தல்கால கூட்டம் ஒன்றில்கூட இருவரும் பேசாது இருந்தனர்.

இன்றைய நிகழ்வில்  ஸ்ரீலங்கா பிரதமரும் வடக்கு முதலமைச்சரும்  அருகருகாக இருந்தபோதும் அதிகளிவில் பேசிக்கொள்ளவில்லை. இதேவேளை பிரித்தானிய ராஜாங்க வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் வடக்கு முதல்வர் ஸ்ரீலங்கா அரசை கடுமையாக சாடினார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி எதற்காக யாழில் நடைபெற்ற தெசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றும் இறுதி நேரத்திலேயே பயணம் இரத்துச் செய்யப்பட்டது என்றும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

இதேவேளை மைத்திரி ரணிலின் யாழ் பொங்கல் விழாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று யாழில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்றைய நிகழ்வில் காணாமல் போனோரின் உறவினர்கள் மைத்திரியை சந்திக்க முயற்சிகள் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிதேசிய பொங்கல் விழாமைத்திரியாழ்ப்பாணம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment