மொழி’ வெற்றிப் படத்துக்குப் பின்னர் ராதாமோகன் – ஜோதிகா கூட்டணியில் உருவாக உள்ளது காற்றின் மொழி

வித்யா பாலன் நடிப்பில் , சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் கடந்த 2017 நவம்பரில் வெளியான இந்திப் படம் ‘துமாரி சுலு’.

இதில் சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், வானொலி ஒன்றில் பணி புரிகிறார். இதனால் பல பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார். இவ்வாறு நகரும் ‘துமாரி சுலு’ படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழில் துமாரி சுலு’  ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை  ராதாமோகன் இயக்க உள்ளார். இதில், வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

‘மொழி’ வெற்றிப் படத்துக்குப் பின்னர் ராதாமோகன் – ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

காற்றின் மொழி’  படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

காற்றின் மொழிஜோதிகாராதாமோகன்வித்யா பாலன்
Comments (0)
Add Comment