யாதும் ஊரே திட்ட கருத்தரங்கு இன்றும் நடைபெறவுள்ளது

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளங்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நடத்தப்படும் யாதும் ஊரே திட்ட கருத்தரங்கு இன்றும் நடைபெறவுள்ளது.

புதிய தலைமுறை, தி இந்து குழுமம் மற்றும் அகரம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் யாதும் ஊரே திட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வு காலை 9 மணிக்கு தொடங்குகிறது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் திட்டத்தின் காட்சி தொகுப்புகளுடன் இரண்டாம் நாள் அமர்வு தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நடைமுறையில் நீர்மேலாண்மை என்ற தலைப்பில் சக்தி நாதனும், நீர்நிலை சீரமைப்பில் தன்னார்வலர்கள் பங்களிப்பு என்ற தலைப்பில், அருண் கிருஷ்ணமூர்த்தி உரையாற்றுகின்றனர்.

அதேபோல், நகர்புற இல்லங்களில் மழை நீர் சேகரிப்பு என்ற தலைப்பில், சேகர் ராகவன் உரையாற்றுகிறார். மானுடம் வென்றது என்ற தலைப்பில் நடைபெறும் பிற்பகல் அமர்வில், நடிகர்கள் நாசர், சித்தார்த். ராணா உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர். இதே போல், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட முன்னாள் ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனும், மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் கல்யாணியும் உரையாற்றுகின்றனர்.

ஊரேகேளிர்சுற்றுசூழல்சேகரிப்புதமிழகம்நீர்மழையாதும்யாவரும்
Comments (0)
Add Comment