யாழில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் ….

யாழ்ராமநாதன் வீதியில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலை தனுரொக் குழு உறுப்பினர்கள் சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம்  வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முகத்தை மூடியிருந்த 4 பேர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள் இரண்டில் சென்றவர்கள்  வீட்டின் ஜன்னல் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்து அழித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை  தாக்குதலுக்குள்ளான வீட்டு உரிமையாளரின் ஒரு மகன் ஆவா குழுவுடன் தொடர்புப்பட்டு செயற்படுவதனால் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார்முன்னாள் ஆவா உறுப்பினையாழ்ப்பாணம்வாள்வெட்டு குழுவினர்
Comments (0)
Add Comment