யாழில் இந்திய மீனவர்கள் கைது…

யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

நேற்றிரவு(22) குறித்த  மீனவர்கள் இழுவைமடிப் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம்  கைது செய்யப்பட்டுள்ளதகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாகையைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட  மீனவர்கள் அனைவரையும் இன்று(23)ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கைதுசட்டவிரோதம்நெடுந்தீவுமினவர்கள்
Comments (0)
Add Comment