யாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி அறிக்கை!

இந்து ஆலயங்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலை திட்டத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவில்லை என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பலாலியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சீருடை அணிந்த இராணுவத்தினரால் சுன்னாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிதி சேகரிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதற்கு மறுப்புத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்து ஆலயங்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலை திட்டத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவில்லை. மாறாக தென்னிலங்கை மக்களிடம் இருந்து கிடைக்க பெறுகின்ற நிதி பங்களிப்புகள் மூலமாகவே எமது மனித நேய வேலை திட்டங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

சீருடைபுனரமைப்பு
Comments (0)
Add Comment