விடுதலைக்கான நடை” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கிய நடைபயணமொன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.
அரசியல் கைதிகளினை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் இந்த நடைபயணத்தினை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று காலை-08 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து குறித்த நடைபயணம் ஆரம்பமாகுமென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி. கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடைபயணத்தில் அனைத்துத் தமிழ் சமூக ஆர்வலர்களையும் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..