யாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை பேருந்தை சோதனையிட்ட பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
பேருந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேருந்தினை பொலிஸார் சோதனையிட்ட போது பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் 9 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த கஞ்சா வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.