யாழில் இளைஞனை சுட்டு கொலை ! வாகனம் மண்டைதீவு கடற்படை முகாமில்?

யாழ். அரியாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள கொழும்பிலிருந்து யாழ்.சென்ற விசேட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்படி நேற்று மண்டைதீவு கடற்படை முகாமில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அரியாலை, உதயபுரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனத்தை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது. கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதவானிடம் கோரப்பட்டிருந்தது. இதற்கு நீதிவானும் அனுமதி வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று மாலை திடீரென கடற்படை முகாமுக்குள் பயணித்த குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா என்பதனை தேடியுள்ளனர். இருப்பினும் இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட குழுவினரிடம் எந்தவொரு தடயமும் கிடைக்காதமையினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். குறித்த குழுவினர் தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியாலைபொலிஸார்மண்டைதீவு கடற்படை முகாம்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment