யாழில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
ஓட்டமடம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் யாழ்.கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பம் தொடர்பிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியகிடைத்துள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,
சம்பவம் குறித்த விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.